இலங்கை மாணவர்களுக்கு அதிக கல்வி வாய்ப்புகளை வழங்க இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே உறுதியளித்துள்ளார்.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவை (10/09) அன்று அமைச்சில் சந்தித்த போதே இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே இதனை கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் உயர், தொழில்நுட்ப மற்றும் பாடசாலை கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறையின் வளர்ச்சி மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இலங்கை மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் இவ்வாறு விரிவுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே குறிப்பிட்டார்.
இருநாடுகளுக்கும் இடையே தொழில்சார் மனிதவள பரிமாற்றங்கள் குறித்து ஆராயவும் கல்வி வாய்ப்புகள் மற்றும் கல்வி உதவித் தொகைகளை பாதுகாக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.