அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர், அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.
இந்த அராஜக சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விசாரணையின் பின்னர் இராஜாங்க அமைச்சரைக் கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரை அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.