வடகொரியா மேலும் இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாநேற்று கிழக்கு கடற்பகுதியில் நீண்டதூரம் சென்று தாக்கக் கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது, 800 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. ஒரே வாரத்தில் இரண்டு முறை வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்காவும், தென்கொரியாவும் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.