தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தற்போது போட்டி மனப்பான்மையோடு நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பு செய்து வருகிறது. அந்தவகையில் ஹாலிவுட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ரியாலிட்டி ஷோவை இங்கு பிக்பாஸ் என்று ஆரம்பித்தது.
ஹிந்தியில் 14 சீசன்கள் நிறைவடைந்து தற்போது பிக்பாஸ் ஒடிடி என்று ஆரம்பித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழில் பிக்பாஸ் 5 சீசன் ஆரம்பிக்கவுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன்தொலைக்காட்சி நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் நடிகர் அர்ஜுனை வைத்து சர்வைவர் நிகழ்ச்சியையும் பிரம்மாண்டமான செட்டோடும் செலவோடும் ரியாலிட்டி ஷோக்களை ஆரம்பித்துள்ளது இந்நிலையில், இந்த மூன்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, அர்ஜுன் மூவருக்கும் எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகர் கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 நாட்கள் கமிட்டாகி ஒரு நாளைக்கு 4 கோடி சம்பளம் என பிக்பாஸ் சீசன் 5ற்கு 60கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம். நடிகர் விஜய் சேதுபதி, மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டிற்கு 50 லட்சம் ரூபாய் பெற்று வருகிறார். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தவிர்த்து சன் குழுமத்துடன் சுமார் 15 கோடியில் ஒப்பந்தம் ஒன்றினை போட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. நடிகர் அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சிக்காக 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.