சனிக்கிழமை 18 ஜூலை 2021 புரட்டாதி 02 பிரதோஷம். புரட்டாதி சனி
நல்ல நேரம் 10:30 AM – 12:00 Noon
நட்சத்திரம் அவிட்டம்
திதி வளர்பிறை துவாதசி காலை 7.42 மணி பிறகு திரோதசி
இராகுகாலம் 09:00 AM – 10:30 AM
எமகண்டம் 01:30 PM – 03:00 PM
குளிகை 06:00 AM – 07:30 AM
சந்திராஷ்டமம் மிதுனம் மாலை 4.59 வரை பிறகு கடகம்
மேஷம்
பிரதோஷ வழிபாட்டால் பெருமை காண வேண்டிய நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.
ரிஷபம்
வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டிய நாள். வருமானப் பற்றாக் குறை அகலும். பழுதாகிக்கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
மிதுனம்
வழிபாட்டின் முலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். எதிலும் இரட்டித்த செலவு ஏற்பட்டு மன அமைதி குறையும். அதிக விலை கொடுத்துச் சில பொருட்களை வாங்கியும் திருப்தி இல்லாமல் போகலாம்.
கடகம்
மாலை நேரம் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று சிந்திப்பிர்கள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகலாம். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
இருண்ட சூழ்நிலை மருண்டு ஒடும் நாள். இனிய செயல் ஒன்று இல்லத்தில் நடைபெறும். அலுவலகப் பணிகளில் இருந்த தாமதம் அகலும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துனழப்பால் முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். உறவினர் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
துலாம்
பண நெருக்கடி அகலும் நாள். நினைத்த காரியம் நினைத்தபடி முடியும். சகோதர வழியில் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள்.
விருச்சிகம்
நந்தியை வழிபட்டு நலம் காண வேண்டிய நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் வாழ்த்துவர்.
தனுசு
விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். தாமதமாகச் சில வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்துவிடுவீர்கள். உடல்நலம் சீராகும்.
மகரம்
வீண் பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பிர்கள். வெளிவ்ட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வித்திடும்.
கும்பம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். இல்லத்தில் மங்கல ஒசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். உங்களின் திறமையான செயல்பாடுகளைப் பார்த்து மற்றவர்கள் வியப்படைவர்.
மீனம்
சிவதூதனை விழிபட்டு சிறப்புகளைக் காண வேண்டிய நாள். கைமாத்தாகக்கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கலாம். நிர்வாகத் திறமைகள் பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்விர்கள்.