சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சாதகமாக பரிசிலிப்பார் என நம்புகின்றேன் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போது ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பல தரப்பினரும் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ரஞ்சன் ராமநாயக்க சிறை தண்டனை அனுபவிக்கின்றார். எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு இரு தண்டனைகள் அவசியமில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. எது எப்படி இருந்தாலும் அவர் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சாதகமான முடிவை எடுப்பார்கள் என நம்புகின்றோம்.” -என்றார் அமைச்சர் டலஸ்.