மாத்தறை, திக்வெல்ல பகுதியில் இணைய வழி கற்கையில் ஈடுபட்ட மாணவியொருவர், ஆபாச வலைத்தளங்களிற்கு அடிமையாகி, அயல் வீட்டிலுள்ள 15 வயதான மாணவனுடன் பாலுறவில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.
அந்த மாணவி தற்போது கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் 18 வயதான மாணவியொருவரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்.
இணைய வழி கற்கையில் ஈடுபட்ட மாணவி, ஆபாச வலைத்தளங்களில் ஈடுபாடு அதிகரித்தமையால் அதிலுள்ள வீடியோக்களை பார்த்து உணர்வு அதிகரிப்பால் அவரது வீட்டின் அருகில் உள்ள 15 வயதான சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இரண்டு குடும்பங்களும் நெருக்கமானவை. நெருங்கிய உறவினர்கள் போல பழகி வந்தனர். அந்த வீட்டுக்கு சென்ற மாணவி, 15 வயது சிறுவன் தனது வீட்டிற்கு கல்விகற்க வரலாமென கூறியுள்ளார்.
அன்று இரவு மாணவியின் வீட்டிற்கு, சிறுவன் சென்றுள்ளார். இருவரும் உடன்பிறப்புக்கள் போல பழகுவதால், பெற்றோர் அவர்களை நுணுக்கமாக கவனிக்கவில்லை.
இரவு வரை கல்வி கற்ற பின்னர், அன்றிரவு தனது அறையிலேயே மாணவனை தங்க வைத்துள்ளார் மாணவி. வீட்டில் எல்லோரும் உறங்கிய பின்னர், மாணவி சிறுவனை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அடுத்த நாள் அந்தச் சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்த அனைத்தையும் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் திக்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் மாணவியை கைது செய்துள்ளனர்.
இணையவழி கற்கையில் ஈடுபடும் மாணவர்களின் நலனில் பெற்றோர் அக்கறை காண்பிக்க வேண்டியதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.