வியாழக்கிழமை 23 ஜூலை 2021 புரட்டாதி 07
நல்ல நேரம் 09:00 AM – 12:00 Noon
நட்சத்திரம் காலை 8.05 முதல் அஸ்வினி
திதி தேய்பிறை திரிதியை
இராகுகாலம் 01:30 PM – 03:00 PM
எமகண்டம் 06:00 AM – 07:30 AM
குளிகை 09:00 AM – 10:30 AM
சந்திராஷ்டமம் காலை 8.05 மணி முதல் கன்னி.
மேஷம்
செலவிற்கேற்ற வரவு வந்து சேரும் நாள். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி அனுகூலம் தரும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முடிவிற்கு வரும்.
ரிஷபம்
குழப்பங்கள் அகலும் நாள். கொடுக்கல் – வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதால் விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
கடகம்
பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பெரிதும் கவனம் செலுத்தும் நாள். பிடிவாதக் குணத்தை தளர்த்திக் கொள்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
சிம்மம்
காலை நேரத்தில் கவனம் தேவைப்படும். நாள். மதியத்திற்கு மேல் உறவினர் வழியில் ஏற்பட்ட வருத்தங்கள் அகலும். தொழில் வளர்ச்சிக்காகப் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள்.
கன்னி
கொடுக்கல் – வாங்கல்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பப் பொறுப்புகள் கூடும். வீண் பழிகள் ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது.
துலாம்
தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வெகுநாட்களாக முயற்சித்த காரியம் ஒன்று நிறைவேறும். வாரிசுகளின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்
வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வாகன மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். உற்றநண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
தனுசு
உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வர்.
மகரம்
வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். புதிய பாதை புலப்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் தோன்றும். உறவினர் பகை அகலும்.
கும்பம்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்து கொள்ளும் நாள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு உண்டு.
மீனம்
நன்மைகள் நடைபெறும் நாள். நாட்டுப் பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப் பிரச்சினைகள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபார விரோதம் விலகும்.