ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனரும், மறைந்த முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவு தினம் (26/09) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் கட்சியின் செயலில் உள்ள உறுப்பினர்கள் குழுவும் ஹொரகொல்ல பகுதியில் அமைந்துள்ள பண்டாரநாயக்கவின் சமாதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பண்டாரநாயக்கவில் கொள்ளை மற்றும் இலக்குகளை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம் என்று இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளர்.