யாழ்.உடுவில் பகுதியில் வாளுடன் ரிக்ரொக் செய்தவர் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சங்கானையை சேர்ந்த இளைஞன் வாளுடன் டிக் டாக் செய்தார் எனக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உடுவில் பகுதியில் வைத்து யாழ்.குற்றத்தடுப்புப் பொலிஸார் சந்தேக நபர் கைது செய்த நிலையில் அவரிடமிருந்த வாளும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் சங்கானை சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்த நிலையில் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.