இலங்கை கடற்படையே வேறு உடையில் வந்து தங்களை தாக்கியதாக, வேதாரண்யம் மீனவர்கள் கூறியதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
“வேதாரண்யத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற போது, தாக்கப்பட்டு, வலைகள் உள்ளிட்ட பொருட்களை இழந்த நிலையில், திரும்பியுள்ள மீனவர்களுடன் தொலைபேசியில் பேசினேன்.
மருத்துவமனையில் இருந்த அவர்கள், கடற்கொள்ளையர்கள் வந்து தாக்கியதாக கூறினார்கள்.
சிறிலங்கா அரசாங்கத்தின் பின்னணியில் கடற்கொள்ளையர்கள் இப்படி நடந்து கொண்டார்களா என்று கேட்டேன். இலங்கை கடற்படை தான் வேறு உடையில் வந்து எங்களை தாக்கி இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.