செவ்வாய்க்கிழமை 29 ஜூலை 2021 புரட்டாதி 12
நல்ல நேரம் 08:00 AM – 09:00 AM
நட்சத்திரம் மிருகசீரிஷம் இரவு 7.50 வரை திருவாதிரை
திதி தேய்பிறை சப்தமி மாலை 4.26 மணி வரை. பிறகு அஷ்டமி
இராகுகாலம் 03:00 PM – 04:30 PM
எமகண்டம் 09:00 AM – 10:30 AM
குளிகை 12:00 Noon – 01:30 PM
சந்திராஷ்டமம் விருச்சிகம்
மேஷம்
பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். அலைபேசி வழியில் அனுகூலமான தகவல் உண்டு. திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
முயற்சிக்குரிய பலன் முழுமையாகக் கிடைக்கும் நாள். முன்னேற்றப் பாதையில்அடியெடுத்து வைப்பீர்கள்.
உதிரிகளாகக் கிடந்த உறவுகள் ஒட்டிக்கொள்ளும். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
மிதுனம்
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொழில் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அச்சுறுத்தும்
நோய்கள் அகல மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. சுபவிரயம் உண்டு.
கடகம்
கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். காலை நேரத்தில் நல்ல தகவல் வந்து சேரும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். சிக்கலான காரியங்கள் சிரமமின்றி முடியும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
சிம்மம்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிக்கு நண்பர்கள் நல்வழி காட்டுவர். அரசியல் சம்பந்தப்பட்டவர்களால் அனுகூலம் கிடைக்கும். பிடிவாதக் குணத்தால் சிலரது அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.
கன்னி
யோகமான நாள். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன்பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தனித்தியங்கும்தன்மை உருவாகும்.
துலாம்
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். மூத்தவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். மக்கள் செல்வங்களால் ஆதாயம் உண்டு. வருமானம் திருப்தி தரும்.
விருச்சிகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. விழிப்புணர்ச்சி அதிகம் தேவை. திடீா் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
தனுசு
உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவல் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடருவீர்கள்.குடும்ப பொறுப்புகள் கூடும். வழக்குகள் சாதகமாகும். வரவு திருப்தி தரும்.
மகரம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தகுந்த ஓய்வு உடல்நலத்தைச் சீராக்கும்.
கும்பம்
பெருமைகள் வந்து சேரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். சந்திக்கும் நண்பர் ஒருவர் உத்தியோக முயற்சிக்கு உறுதுணைபுரிவர்.
மீனம்
புகழ் மிக்கவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியம் சீராகும்.
தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சி பலன் தரும். பணியாளர்கள் பக்குவமாக நடந்து கொள்வர்.