யாழ்.வல்வெட்டித்துறையில் தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்தபோது குண்டு ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
பற்றைக் காணி ஒன்றைத் துப்பரவு செய்தபோது வெடிக்காத நிலையில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
குண்டுடைய பெயர் அறிய முடியாத வகையில் இருப்பதுடன் யுத்தகலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் அறியமுடிகின்றது.
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.