பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் லியோன் (Lyon) நகரில் நடைபெற்ற சர்வதேச உணவு கண்காட்சியில் ஜனாதிபதி இம்மானுவேல் நேற்று கலந்துகொண்டார். பின்னர் கூட்டத்தின் நடுவே அவர் நடந்துசென்றபோது எங்கிருந்தோ வீசப்பட்ட முட்டை ஒன்று அவரது தோள்பட்டை மீது விழுந்தது. எனினும் நல்வாய்ப்பாக முட்டை உடையவில்லை.
இம்மானுவேல் மக்ரோன் உடனடியாக, அங்கிருந்த அதிகாரிகள் இம்மானுவேல் மக்ரோனை சுற்றி அரணாக சூழ்ந்தனர். ஜனாதிபதி மீது முட்டை வீசிய நபரை பாதுகாப்பு காவலர்கள் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், ‘அந்த நபருக்கு என்னிடம் எதாவது கூற எதாவது இருப்பின், அவர் தாராளமாக வரலாம்’ என்று முட்டை வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்து மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணி காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதல் குறித்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பொதுவெளியில் தாக்கப்படுவது இது முதல்முறையன்று, கடந்த ஜூன் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மக்ரோன் பொதுமக்களிடம் பேசியப்போது, ஒரு நபர் அவர் கன்னத்தில் அறைந்தார். இந்த தாக்குதலில் மக்ரோன் நிலைகுலைந்தார். தாக்குதலில் ஈடுபட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டு அவருக்கு 4 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.