அரிசி மீது அரசு விதித்த கட்டுப்பாட்டு விலையை நீக்கியதால் நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் சந்தையில் அரிசியின் விலையை அதிகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று தெரிவித்தனர்.
பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ 140 ரூபாவாகவும் மற்றும் கீரி சம்பா ஒரு கிலோ 165 ரூபா ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டரிசி ஒரு கிலோவை 62.50 ரூபாவிற்கும், சம்பா அரிசி ஒரு கிலோவை 70 ரூபாவிற்கும் மற்றும் கீரி சம்பா ஒரு கிலோவை 80 ரூபாவிற்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.