புதன்கிழமை 29 ஜூலை 2021 புரட்டாதி 19 மத்தியாஷ்டமி
நல்ல நேரம் 09:00 AM – 10:00 AM
நட்சத்திரம் திருவாதிரை
திதி தேய்பிறை அஷ்டமி மாலை 6.08 மணி. பிறகு நவமி
இராகுகாலம் 12:00 Noon – 01:30 PM
எமகண்டம் 07:30 AM – 09:00 AM
குளிகை 10:30 AM – 12:00 Noon
சந்திராஷ்டமம் விருச்சிகம்
மேஷம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். வெளியுலகத்தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
ரிஷபம்
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். புதியஒப்பந்தங்கள் வந்து சேரும். வீடுவாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மிதுனம்
செல்வாக்கு உயரும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொலைபேசி வழித்தகவலால் தொழில் வளர்ச்சி கூடும்.
கடகம்
பாராட்டும், புகழும் கூடும் நாள். செலவுகள் குறைந்து சேமிப்பதற்கு வழி பிறக்கும். எடுத்த காரியத்தை முடிப்பதில் அலைச்சல் ஏற்பட்டாலும் முடிவில் ஆதாயம் கிடைக்கும். சொத்துகளால் லாபம் உண்டு.
சிம்மம்
பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பக்கபலமாக இருந்த நண்பர்கள் ஒத்துழைப்புச்செய்வர். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கன்னி
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். தனவரவில் இருந்த தடை அகலும்.
துலாம்
பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும் நாள். பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. சமூகத்தில் அந்தஸ்து உயரும். வியாபார விருத்தி உண்டு.
விருச்சிகம்
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாள். வாகனப் பழுதுச் செலவுகள் ஏற்படலாம்.வரவை விடச் செலவு கூடும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.
தனுசு
வம்புவழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். எடுத்த காரியத்தை முடிக்கச் சகோதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. பயணத்தால் மாற்றங்கள் உருவாகும்.
மகரம்
திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும் நாள். பணம் பலவழிகளில் வந்து பையை நிரப்பும்.தொழில் முன்னேற்றம் கருதிப் புதிய திட்டங்கைளத் தீட்டுவீர்கள். வியாபார விரோதம் விலகும்.
கும்பம்
ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளா்த்திக் கொள்வீர்கள்.
மீனம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனஅமைதி கூடும். திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள். உத்தியோக மாற்றச் சிந்தனை மேலோங்கும். ஆலய வழிபாடு ஆனந்தம் வழங்கும்.