ஊடக சுதந்திரத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரோமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படுகின்ற ஊழல்களை வெளிக்கொணர்வது ஊடகங்களின் கடமை என எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடமையை நிறைவேற்றும் ஊடகவியலாளர்களை சிஐடிக்கு அழைத்து அவர்களை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுப்பதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் எவருக்கும் உரிமை இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.