இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ வர்தன் சிரிங்லா (Harsh Vardhan Shringla) எதிர்வரும் வாரம் இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் அமெரிக்காவின் நியூயோர்க்கில் அண்மையில் சந்திப்பு நடாத்தியிருந்த பின்னணியில், வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கை விஜயம் செய்ய உள்ள சிரிங்லா, சில முக்கிய இரு தரப்பு திட்டங்களை ஆரம்பித்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிரிங்கலா வெளியுறவுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் என்ன நோக்கத்திற்கான அவர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் என்பது பற்றிய விரபங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.