வெள்ளிக்கிழமை 01 ஜூலை 2021 புரட்டாதி 21
நல்ல நேரம் 06:00 AM – 09:00 AM,
நட்சத்திரம் பூசம்
திதி தேய்பிறை தசமி
இராகுகாலம் 10:30 AM – 12:00 Noon
எமகண்டம் 03:00 PM – 04:30 PM
குளிகை 07:30 AM – 09:00 AM
சந்திராஷ்டமம் தனுசு
மேஷம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப்பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றம் பற்றிச்சிந்திப்பீர்கள். அரசு வழி அனுகூலம் கிடைக்கும். புதல்வர்களால் விரயம் உண்டு.
ரிஷபம்
ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் நாள். செல்வாக்கு உயரும். தொலைபேசி வழித்தகவல் தூர தேசப் பயணத்திற்கு உறுதுணை புரியும். பழையபாக்கிகள் வசூலாகும்.
மிதுனம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள்.
கடகம்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சிகை கூடும். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். மனக்கலக்கங்கள் மாறும். குடும்ப ஒற்றுமை பலப்படும். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும்.
கன்னி
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்புக்கிடைக்கும். சொன்ன சொல்லைக்காப்பாற்றி மகிழ்வீர்கள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணம் பலன் தரும்.
துலாம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத்தட்டும் நாள். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். கடன் சுமை குறையும்.
விருச்சிகம்
எடுத்த வேலைகளை எளிதில் முடிக்கும் நாள். எதிர்பார்த்த தொகை எளிதில் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும்.
தனுசு
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நாள். உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். எதையும் நம்பி யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
மகரம்
குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டு. சம்பள உயர்வு பற்றிய சந்தோஷமான செய்தி வந்து சேரும்.
கும்பம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். நாணயமும், நம்பிக்கையும் கொண்ட நண்பர்களால் தொழிலுக்கு உதவி கிடைக்கும். சுபச்செய்தி உண்டு.
மீனம்
மனஅமைதி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் இனிய விதமாக நடை பெறும்.