இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 100 சதவீத வைப்பு நிதி எல்லையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்தார். மேலும், இறக்குமதியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் தேவையானவற்றை மட்டும் இறக்குமதி செய்யுமாறும் மத்திய வங்கியின் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.