Friday, March 31, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home கட்டுரைகள்

கரடு முரடான பாதையில் சென்றிருக்கும் இந்திய – இலங்கை உறவுகள்

புதிய உயர்ஸ்தானிகர் மொரகொட முன்னாலிருக்கும் சவால்கள்

News Team by News Team
October 2, 2021
in கட்டுரைகள், முக்கியச்செய்திகள்
Reading Time: 2 mins read
0 0
0
கரடு முரடான பாதையில் சென்றிருக்கும் இந்திய – இலங்கை உறவுகள்
0
SHARES
54
VIEWS
FacebookWhatsappTwitterEmail
கேணல் ஆர். ஹரிஹரன்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் கந்த ஒருசில தசாப்தங்களில் கரடுமுரடான பாதையில் சென்றுவிட்டன. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரின் கதிரை இதுவரையில் ஒரு வருடகாலமாக காலியாக இருந்தது என்பதை விடவும் வேறு எதுவும்  உறவுகளின் இலட்சணத்தை பிரகாசமாக வெளிக்காட்டமுடியாது.இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட இப்போது தான் டில்லி  வந்திருக்கிறார்.அவரது நியமனம் குறித்து 2020 ஆகஸ்ட் மாதமே ஊகங்கள் சூசகமாக அறிவித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில், உயர்ஸ்தானிகரை நியமிப்பதில் இலங்கை காட்டிய தாமதத்துக்கு இரு நாடுகளையும் தாக்கிய கொரோனாவைரஸின் டெல்ரா உருமாறியை வசதியான காரணமாக கூறிவிட முடியும்.ஆனால்,கோதாபய ராஜபக்ச 2019 நவம்பரில் அதிகாரத்துக்கு வந்த பிறகு ஏறுமாறானதாகிப் போய்விட்ட இந்தியாவுனான உறவுகளுக்கு புத்தூக்கத்தை கொடுப்பதற்கான தேவையை உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தவேண்டிய தேவை முந்திச்சென்று விட்டது என்பதையும் கவனிக்கவேண்டும்.
உண்மையில், இலங்கை ஜனாதிபதி பதவியேற்ற பத்து நாட்களுக்குள்  புதுடில்லிக்கு விஜயம் செய்தார்.கோதாபய  பதவியேற்ற உடனடியாகவே இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி கொடுத்தனுப்பிய அழைப்பிதழை அவரிடம்  கையளிப்பதற்காக கொழும்புக்கு பறந்துவந்தார்.இலங்கை ஜனாதிபதி புதுடில்லிக்கு மேற்கொண்ட அந்த விஜயம் பூகோளவியல், கலாசாரம், மதம் மற்றும் பொதுவான வரலாற்று அனுபவம் ஆகியவற்றினால் தொப்பிள் கொடி பிணைப்பைக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான தனித்துவமான உறவுகளை நன்கு உணர்ந்தே வைத்திருக்கிறார் என்பதை காட்டியது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இலங்கை ஜனாதிபதி இந்தியாவை மிகவும் நெருக்கமான அயல்நாடு என்றும் நீண்டகால நட்பு நாடு என்றும் வர்ணித்ததுடன் இந்தியாவுடனான இலங்கையின் ஒத்துழைப்பு  பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததாக  — பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய பிரதமர் மோடியைச் சந்தித்தபோது

அதேவேளை மற்றைய நாடுகளுடனான ஒத்துழைப்பு முயற்சிகள் பெருமளவுக்கு பொருளாதார மற்றும் வாணிப ரீதியானவையாகவே இருக்கின்றன என்று குறிப்பிட்டார். இந்த கருத்துக்கள் இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பான இந்தியாவின் விசனத்தை மனதிற்கொண்வையாக அமைந்தன. இந்தியாவுடனான இலங்கையின் ஒத்துழைப்புக்கு இடையில் எந்தவொரு மூன்றாவது நாடும் குறுககே தான் அனுமதிக்கப்போவதில்லை என்றும் மோடியிடம் கோதாபய கூறினார்.

 

ஆனால், 2019இக்கு பிறகு எவ்வளவோ காரியங்கள் நந்துமுடிந்து விட்டன.இந்தியாவினதும் இலங்கையினதும் உள்ளக மற்றும் வெளியக சூழ்நிலைகளில் மாத்திரமல்ல,இந்தோ பசுபிக் பிராந்தியம் முழுவதிலும் பெருமளவு மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன.மாலைதீவையும் பூட்டானையும் தவிர இந்தியாவின் மற்றைய அயல்நாடுகள் சகலதுமே சீனாவின் பேரார்வமிக்க  மண்டபமும் பாதையும் செயற்திட்டத்தில் இணைந்துகொண்டு இந்தியாவின் உடனடி அயலகத்தில் சீனாவின் பிரசன்னத்தை உறுதிசெய்தன.

 

2020மேயில் கிழக்கு லடாக்கில் கட்டுப்பாட்டு எல்லையில் சீனத்துருப்புகள் ஊடுருவியதையடுத்து, சீனாவுடனான இந்திய உறவுகள் பல முனைகளில் மாற்றியமைக்க முடியாத அளவுக்கு  ஒத்துழைப்பில் இருந்து மோதலாக மாறிவிட்டன.கல்வான் பகுதியில் மூண்ட மோதலில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர்.நிலைவரத்தை தணிப்பதற்கு பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்ட பின்னரும் கூட கட்டுப்பாட்டு எல்லையின் இரு பக்கங்களிலும் படைகளின் மட்டங்கள் உயர்வானவையாகவே இருக்கின்றன.

 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்துக்கு  வந்திருக்கும் நிலையில், பாகிஸ்தானின் தோழமையுடன் பிராந்தியத்தில் சீனா கூடுதலான அளவுக்கு  தன்முனைப்பான பாத்திரத்தை வகிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இந்த நிலைவரம் ஆசியாவின் இரு பெரிய அயல்நாடுகளுக்கும் இடையிலான சஞ்சலமான உறவுகளுக்கு மேலும் சிக்கல்களை சேர்க்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

 

இந்தோ-பசுபிக்கில் சீனாவின் அதிகரிக்கும் பகைமையுணர்ச்சிக்கு முன்னால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸதிரேலியா ஆகிய நாடுகள் நான்கு தரப்பு கட்டமைப்பின் ஊடாக தங்களது கூட்டுப்பலத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்தன. குவாட் என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் நான்கு உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளும் அதிகரிக்கப்பட்டன.உண்மையில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் முன்னெப்போதையும்  விட இப்போது நெருக்கமானவையாக இருக்கின்றன.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 25/09அன்று நடைபெற்ற குவாட் கூட்டத்தின் பின்னர் தலைமைகள் எடுத்துக்கொண்ட புகைப்படம்

இந்த நகர்வுகளையடுத்து, உலக மூலோபாய அதிகாரத்தின் ஈர்ப்புமையம்  இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு மாறுகின்றது.இதில் இலங்கை முக்கியமானதாக வெளிக்கிளம்புகின்றது.இலங்கையில் கடல்சார் மற்றும் உட்கட்டமைப்பு சொத்துக்களை அபிவிருத்தி செய்வதில் சீனாவின் முதலீடு அதன் இந்தோ – பசுபிக் பாதுகாப்பில் முக்கியமான ஒரு பகுதியாகிறது.

 

எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு பரந்ததாக, ஆழமானதாக, சகலதையும் தழுவியதாக வளரப்போகிறது என்பதை எம்மால் எதிர்பார்க்கமுடியும்.இந்து சமுத்திரத்தில் மூலோபாய நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது தெற்காசிய பிராந்தியத்தில் முன்னரங்க நாடு என்ற வகையில் இலங்கை அதன் தேசிய நலன்களை பேணிக்காப்பதில் நெருக்கடிகளை எதிர்நோக்கப்போவது சாத்தியம்.

 

ஜனாதிபதி ராஜபக்ச இந்தியாவுக்கு உறுதிமொழிகளை அளித்தபோதிலும் அவர் தனது நடவடிக்கைகள் மூலமாக இந்தியாவை நேசிப்பவராக இருக்கவில்லை.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக  அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்துகொண்ட முத்தரப்பு உடன்படிக்கையை ஜனாதிபதி ராஜபக்சவின் கண்காணிப்பின் கீழ் சந்தேகத்துக்கிடமான காரணங்களின் நிமித்தம் இலங்கை கைவிட்டது.

 

கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தின் 85 சதவீதமான நிலத்தின் குத்தகையை 99 வருடங்களுக்கு சீன ஹாபர் என்ஜினியரிங் கம்பனியே வைத்திருக்கும்.இந்த துறைமுக நகரம் கொழும்பு துறைமுகத்தை எதிர்நோக்கியதாக அமைகிறது.கொழும்பு துறைமுகத்தின் ஊடாகவே இந்தியாவின் கொள்கலன் போக்குவரத்துகளில் 70 சதவீதமானவை இடம்பெறுகின்றன.

 

அதனால் இந்தியாவுக்கு மெய்யான கவலைகள் இருக்கின்றன.கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயம் சீனாவின் பிரசன்னத்தை சட்டபூர்வமானதாக்குகிறது.வாணிபம், வர்த்தகம், போக்குவரத்து ஏற்பாடுகள், தொலைத்தொடர்பு, நிதி, உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு என்று பல்வேறு துறைகளில் பெருமளவு சீனர்களின் வருகையை துறைமுக நகரம் வேண்டிநிற்கப்போகிறது.

பாக்கு நீரிணையில்  தமிழ்நாட்டு கரையோரத்தில் இருந்து சுமார் வெறுமனே 50 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் நைனாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகியவற்றில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஆலைகளை நிறுவுவதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு 2021 ஜனவரியில் இலங்கை அங்கீகாரமளித்தது.
சீனாவின் இந்த சொத்துக்கள் சீனப் புலனாய்வின் செயற்களங்களாக மாறமுடியும்; ஒற்றுக்கேட்டல், இந்திய தொலைத்தொடர்புகளில் தலையிடுதல்,  கப்பல் போக்குவரத்துகளைக் கண்காணித்தல் மற்றும் இலத்திரனியல் போர்முறை ஆற்றலை மேம்படுத்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படமுடியும். சீனாவின் இலக்குகளுக்கு பொருத்தமான முறையில் இலங்கையின் அரசியல் மற்றும் வாணிபத்தின் மீது செல்வாக்கு செலுத்தவும் இந்த சொத்துக்கள் பயன்படுத்தப்படலாம் என்பதே இந்தியாவின் மிகப்பெரிய கவலையாகும்.இந்த நிகழ்வுப்போக்குகள் தொடர்பில் இந்தியாவின் விசனம் அதிகரிப்பது இலங்கைக்கு தெரியும்.இலங்கையுடனான உறவுகளில் இந்த அம்சங்களை இந்தியா கணக்கில் எடுக்கும்.
ஜனாதிபதி ராஜபக்ச  தனது நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதுடன் புத்தசாசனத்தை பேணிக்காப்தற்கும் உறுதிபூண்டிருக்கிறார்.தனக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகளை மேற்பார்வைக் குழுக்களுக்கு தலைவர்களாகவும் நிருவாக பதவிகளுக்கும் நியமித்து ராஜபக்ச நாட்டை நிருவகித்துவருகிறார்.குற்றவியல் நடவடிக்கைகளில் குற்றவாளிகளாக காணப்பட்ட இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்து விடுதலை செய்திருப்பதுடன் அத்தகைய நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டடிருக்கும் ஆயுதப்படை அதிகாரிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றிருக்கிறார்.இந்த செயற்பாடுகளை எல்லாம் நிருவாகம்  பெருமளவுக்கு இராணுவமயப்படுத்தப்படும் அறிகுறிகளாகவே ஜனநாயக அரசியல் சமுதாயம் நோக்குகிறது.
ஜனாதிபதி கோட்டபாயவினால் பொதுமன்னிப்பளிக்கப்பட்ட மிருசுவில் படுகொலை குற்றவாளி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க

கொவிட் –19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் இறுதியளவில் 4 இலட்சத்தை தாண்டிவிட்டது.தொற்றுநோயினால் முடங்கிப்போன சுற்றுலாத்துறை, வெளிநாட்டு பண அனுப்பீடுகள் மற்றும் ஏற்றுமதி வாணிபம் ஆகியவற்றை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது.இந்த நிலைவரம் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்திருக்கின்றது.அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகள் வானளாவ  உயர்ந்துவிட்டன.

 

 

இந்த நிகழ்வுப்போக்குகளை எல்லாம் கவனத்திற்கொள்ளாதவராக ராஜபக்ச, வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தை தூக்கிநிமிர்த்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு நேசமானசமுதாயத்தை தோற்றுவிப்பதற்கும் எனக்கூறிக்கொண்டு மிகவும் கடுமையான சில நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.சேதனப் பசளை வகைகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக இரசாயன பசளை வகைகளின் இறக்குமதியை அவர் தடைசெய்ததுடன் தொலைபேசிகள் மற்றும் வாகனங்களின் இறக்குமதியையும் தடைசெய்தார்.இவையெல்லாம்  மக்களின் வாழ்க்கையை கஷ்டத்துக்குள்ளாக்கின.

 

இலங்கையில் முதலீட்டுச் சூழ்நிலை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அண்மைய அறிக்கையொன்று மிகவும் எதிர்மறையான அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறது.

 

இத்தகைய சிக்கலான ஒரு சூழ்நிலையில்தான் புதுடில்லியில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் என்ற வகையில்  57 வயதான அசோகா மிலிந்த மொரகொடவின் பதவி சவால்மிக்கதொன்றாக போகின்றது.அரசியல் விளக்கப்பாடுயை மொரகொட இரு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் ஜனாதிபதி மகிந்த  ராஜபக்சவின் ஆட்சியில் நீதி மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள் அமைச்சராகவும் பதவிவகித்தார்.

அமைச்சரவை அந்தஸ்தில் உயர்ஸ்தானிகராக மொரகொடவின் நியமனம் அவரின் கருத்துக்களை ராஜபக்சாக்கள் செவிமடுப்பார்கள் என்பதை உணர்த்துகிறது.வர்த்தகம், ஆட்சிமுறை,இராஜதந்திரம்,ஊடகத்துறை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றில் அக்கறையும் அனுபவமும் கொண்டமொரகொடசுவிட்சர்லாந்தின் லோசேனில் உள்ள ஐ.எம்.டி.வர்த்தக பாடசாலையின் பழைய மாணவராவார். அவர் இப்போது நடவடிக்கைச் செயற்திட்டமொன்றுடன் புதுடில்லிக்கு வந்திருக்கிறார்.   
இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மொரகொட தனது நியமனக்கடித்தினை மெய்நிகர் வழியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் கையளித்தபோது

“இந்தியாவில் இலங்கைக்கான இராஜதந்திர தூதரகங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மூலோபாயம் 2021/2023 ” என்பதே அந்த செயற்திட்டமாகும். இந்தியாவில் உள்ள மூன்று தூதரகங்களினாலும் பின்பற்றப்படவேண்டிய தெளிவான இலக்குகளை, நோக்குகளை,மூலோபாயங்களை அத்திட்டம் உள்ளடக்கியிருக்கிறது.தற்போதைய இருதரப்பு உறவுகதை   மூலோபாய மட்டமொன்றுக்கு உயர்த்துதல், வெளிநாட்டு முதலீடுகளையும் ஏற்றுமதி மூலமான சம்பாதிப்பையும் பலப்படுத்துதல்,பாதுகாப்புத்துறையிலும் இந்து சமுத்திரத்தின் பந்தோபஸ்திலும் மூலோபாய ஒத்துழைப்பை விரிவுபடுத்தல் ஆகிய இலக்குகள் அவற்றில் அடங்கும்.

 

குறிப்பிடப்பட்டிருக்கும் ஏழு இலக்குகள் பேரார்வம் மிக்கவை.சில இலக்குகள் பரஸ்பர  உயர்மட்ட விஜயங்கள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் ஆகியவற்றின் ஊடாக இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துதல் போன்ற சாதாரணமான இலக்குகளாகும்.வேறு சில இந்தியாவின் மாநிலங்களுடன் பெருமளவுக்கு ஊடாட்டங்களை வளர்த்தல் போன்ற புதுவகையான இலக்குகளாகும்.இவற்றின் மூலமாக இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினை, இலங்கையின் கடல்வளத்தை பாதுகாத்தல் (மீனவர்களின் பிரச்சினையைக் குறிக்கிறது ) போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒரு சில இலக்குகள் சாதிக்கக்கூடியவை.அதாவது,இரு தரப்பு கூட்டு ஆணைக்குழுக்களை அமைத்தல், கலாசாரம்,கல்வி,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றைக் கூறலாம்.ஆகாயம், கடல், மின்சாரத்திட்டங்கள் மற்று டிஜிற்றல் தொடர்பு ஆகியவற்றையும் சாதிக்கக்கூடிய இலக்குகளுக்குள் அடக்கலாம்.

 

மொரகொடவின் இந்த ஆவணம் உள்ளக பயன்பாட்டுக்கானதாக இருந்தாலும்,இலங்கையிலும் இந்தியாவிலும் பத்திரிகைகளுக்கு வழங்கிய பல்வேறு  நேர்காணல்களில் அதன் உள்ளடக்கங்களைப் பற்றி அவர் பேசியிருக்கிறார்.மக்களின் நம்பிக்கைகையை பெறுவதற்காக அவர் அவ்வாறு செய்திருக்கலாம்.ஆனால்,சில துரிதமான விளைவுகளைப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து செயற்படும்போதுதான் இவை சாத்தியமாக முடியும்.

இந்திய வெளிவிவகார செயலாளரிடத்தில தனது திட்டப்பாதை ஆவணத்தினை கையளிக்கும் மொரகொட

உதாரணத்துக்கு, இலங்கையின் வடமாகாணத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை தோற்றுவிப்பதற்காக தமிழ்நாடு மாநிலத்தின் தொழிலதிபர்களை உள்ளடக்கிய கூட்மைப்பு ஒன்றை நிறுவ முதலமைச்சரை இணங்கவைக்கலாம்.இன்மூலமாகஇந்தியாவில் உள்ள அகதிகள் இலங்கை திரும்புவதை இலகுவாக்கலாம்.ஆனால்,இலங்கையில் சீனாவின் காலடி ஆழமாக பதியும் நிலையில்,இந்திய முதலீட்டாளர்களுக்கு சமமான வாய்ப்புகள் கொடுக்கப்படுமா? முன்முயற்சிகளை எடுப்பதன் மூலம் இலங்கையே அதை உறுதிப்படுத்த முடியும்.

 

அதேபோன்று,இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பிலான சிக்கலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிவகைகளைக் கண்டறிய போதுமான  முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.இரு தரப்புக்கும் பயன்தரத்தக்க தீர்வொன்றை அடைவதற்கு பழைய பாணியிலான தீர்வுகளுக்கு அப்பால் செல்வதற்கு அரசியல்  விருப்பார்வமும் துணிச்சலும் தேவையாகும்.

 

சிறுபான்மையினத்தவர்களான தமிழர்களுக்கு ஒப்புரவான உரிமைகளை வழங்குவது தொடர்பான பிரச்சினை இந்திய அரசியலில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது என்பதால், இலங்கை அந்த பிரச்சினையை அலட்சியம் செய்யமுடியாது.1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை  பல குறைபாடுகளைக் கொணடிருக்கின்ற போதிலும், தமிழர்களின் அபிலாசைகளில் சிலவற்றை நிறைவேற்றுவதற்கான தகுதியைக் கொண்டதாக இன்னமும் விளங்குகிறது.

புதுடில்லி சுவாமிநாராயண் அக்ஷர்தத்தை இலங்கை உயர்ஸ்தானிகர் தரிசித்த போது

அரசியலமைப்புக்கான 13வது திருத்தம் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியுடன் மாகாணசபைகளை தோற்றுவித்தது.ஈழப்போர் முடிவடைவதற்கு முன்னதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 13 க்கும் அப்பால் செல்வது குறித்து பேசினார்.எதுவும் நடக்கவில்லை. ஜனாதிபதி கோதாபய 13 வது திருத்தத்தை விரும்பவில்லை என்பது தெளிவானது.அதை அவர் இரத்துச் செய்யக்கூடும் என்று பலரும் உணருகிறார்கள்.

 

இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் மொரகொட இந்த பிரச்சினைகளில் சிலவற்றுக்கு  தீர்வைக்கண்டு முன்னேற்றத்தைக் காட்டினால், தனது ஆவணத்தில் கூறப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலானவற்றை அயைக்கூடியதாக இருக்கும்.

 

(இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரியாக இருந்த கேணல் ஹரிஹரன்  தெற்காசியா மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களில் நிபுணராவார்.இந்திய அமைதி காக்கும் படை நிலைகொண்டிருந்தபோது (1987–1990) இலங்கையில் பணியாற்றியவர்)

Tags: இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்கேர்ணல் ஹரிகரன்மிலிந்த மொரகொட
News Team

News Team

Recent Posts

  • யாழ்.கச்சதீவிலுள்ள மணல் திட்டுக்களில் இருந்து மணல் அகழும் கடற்படை
  • IMF ஆதரவுடன் நான்கு ஆண்டுகளில் நாடு ஸ்தீரமடையும்
  • சடுதியாக வீழ்ச்சியடைந்த மரக்கறிகளின் விலை
  • இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பிலிருந்து ஆரம்பம்
  • நிவாரணம் வழங்கினால் முட்டை விலை குறைக்கலாம்

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist