திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கைதிகள், தங்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடிதத்தில் “நாங்கள் 9 பேரும் கடவுச்சீட்டு காலாவதியாகிய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.
எமது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம்.
தடுப்புக் காவலில் இருந்து விடுதலை பெற்றுத்தருவதற்கு தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள முன்வர வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.