இத்தாலியில் நடைபெறும் மாநகரசபை தேர்தலில் இந்த முறை 6 இலங்கையர்கள் போட்டியிடுகின்றனர். இத்தாலிய தேர்தலில் முதன்முறையாக அதிகளவான இலங்கையர்கள் இம்முறையே போட்டியிடுகிறார்கள்.
மிலான் மற்றும் நாபோலி தொகுதிகளுக்கு இந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இந்த தொகுதிகளில் அதிகளவான இலங்கையர்கள் வசித்து வருகிறார்கள். தம்மிக சந்திரசேகர, ராய் கங்கா, கிறிஸ்டோபர் டம்பகே, கிறிஸ்டினா கிட்மி ஆகியோர் மிலான் நகரசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். அஞ்சலி அழகக்கோன், ரவீந்திர ஆகியோர் நாபோலி நகர சபைக்கு போட்டியிடுகின்றனர். இத்தாலியின் நகரசபை தேர்தல் நாளை (03) மற்றும் நாளை மறுநாள் (04) நடைபெறும்.