பின்லாந்து அரசு மிங்க் வகை கீரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது. பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிங்க் வகை கீரிகள் பரவலாகக் காணப்படுகின்றன.
இவற்றின் அடர்த்தியான ரோமத்தில் குளிருக்கு இதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. மிங்க் கீரிகளிடம் இருந்து புதுவகை கோவிட் வைரஸ் உருவாக வாய்ப்பு உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இதனால் இந்த வகை கீரிகள் அழிக்கப்பட்டன. குறிப்பாக டென்மார்க்கில் 3ல் 2 மடங்கு மிங்குகள் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையால் டென்மார்க் அரசு கடும் கண்டனங்களைப் பெற்றது.
இந்நிலையில் பின்லாந்து அரசு மிங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்தது. சோதனை முயற்சியாக நேற்று மிங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது.
பின்லாந்தில் மொத்தம் 50 லட்சம் தடுப்பூசி தயாராக உள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மிங்க் விலங்குகளுக்கும் இரண்டு தடுப்பூசி செலுத்த இது போதுமானது என பின்லாந்து சுகாதாரத் துறையினர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.