இலங்கை கடற்படையின், ஜயசாகர என்ற போர்க்கப்பல், கடற்படையின் கப்பல்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த, இந்தக் கப்பலைசிறிலங்கா கடற்படையின் சேவையில் இருந்து நீக்கும் நிகழ்வு திருகோணமலை டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை கடற்படையில் இருந்து நீக்கப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பல், கடலோரக் காவல்படையின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டு டிசெம்பர் 9ஆம் திகதி சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஜயசாகர போர்க்கப்பல், நான்கு தசாப்தங்களாக கடற்படையில் பணியாற்றியிருந்தது.
ஜயசாகர போர்க்கப்பலின் சகோதர போர்க்கப்பலான சாகரவர்த்தன, 1994ஆம் ஆண்டு கடற்கரும்புலிகளால், மன்னார் கடற்பரப்பில், மூழ்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.