ஞாயிற்றுக்கிழமை 03 ஜூலை 2021 புரட்டாதி 17
நல்ல நேரம் 07:00 AM – 10:00 AM
நட்சத்திரம் மகம்
திதி தேய்பிறை துவாதசி
இராகுகாலம் 04:30 PM – 06:00 PM
எமகண்டம் 12.00 Noon – 01:30 PM
குளிகை 03:00 PM – 04:30 PM
சந்திராஷ்டமம் மகரம்
மேஷம்
இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரும் நாள். வங்கிச்சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணத்தால் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும்.
ரிஷபம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். விருப்ப ஓய்வு பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்படலாம். உத்தியோ மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
மிதுனம்
துடிப்போடு செயல்பட்டு தொழில் வளர்ச்சி காணும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. அரசியல் வாதிகளால் அனுகூலம் ஏற்படும்.
கடகம்
பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள்.
சிம்மம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உடன் பிறப்புகளின் ஆதரவால் உற்சாகம் அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற கொள்கைகளைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள்.
கன்னி
புகழ் பெருகும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். நவீனப்பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
வசதிகள் பெருகும் நாள். வருங்காலத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். தாய்வழி உறவினர்களால் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.
மகரம்
காரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். தீர்க்கமாக முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உத்தியோகத்தில் பிரச்சினைகள் உருவாகும்.
கும்பம்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் திருப்தியளிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும்.
மீனம்
ஆகாரத்தில் அக்கறை செலுத்தி ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்ள வேண்டிய நாள். திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் எண்ணம் மேலோங்கும்.