தேசபிதா மஹாத்மா காந்தியின் 152ஆவது பிறந்ததினநினைவு நாளை முன்னிட்டு உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மலரஞ்சலி செலுத்தினார்.
புத்தரின் கொள்கைகள் மஹாத்மா காந்தி மீது ஆழமான செல்வாக்கினை செலுத்தியிருந்தன.
அவரது வாழ்வும் இலட்சியங்களும் தேசிய, சர்வதேச எல்லைகளைக்கடந்து மனிதசமுதாயத்தை வழிநடத்துகின்றன.
இதேவேளை, யாழ். இந்திய துணைத் தூதரகமானது மகாத்மா காந்தியின் 152வது பிறந்த நாளை கொவிட் -19 சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கொண்டாடியது.
யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் திரு. சீ.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அகில இலங்கை காந்தி சேவா சங்க உதவி செயலாளர் செல்வி சி.சிவரம்யா அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.