மகராஷ்டிரா மாநிலம் மும்பையில், சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் நடிகர் ஷாரூக்கான் மகன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்பெயினில் நடைபெற்று வரும் படபிடிப்பை ரத்து செய்து இந்தியா திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரபல பாலிவுட் நடிகரின் பெண் தோழியின் சகோதரரான அஜிசிலாஸ் டெமெட்ரியேட்ஸ் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு மும்பையிலிருந்து புறப்பட்ட கோவாவை சேர்ந்த சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
நபர் ஒருவருக்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தி சக பயணிகள் போல் பொலிஸார் கப்பலில் பயணித்துள்ளனர். நள்ளிரவு பார்ட்டி தொடங்கியதும் சோதனை வேட்டையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். சுமார் 7 மணி நேர தேடுதலுக்கு பின், டெல்லி மற்றும் அரியானாவை சேர்ந்த இரு போதைப்பொருள் கடத்தல் காரர்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யனிடமும் விசாரணை நடத்திய பொலிஸார் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
கதான 3 பெண்கள் டெல்லிக்கும், மேலும் சிலர் மும்பைக்கும் அழைத்து சென்று விசாரிக்கப்படுகின்றனர். இதனிடையே போதை பார்ட்டி தொடர்பாக 3 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குழுக்களுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்பெயினில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு ஷாருக்கான் இந்தியா திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.