திங்கட்கிழமை 04 ஜூலை 2021 புரட்டாதி 18 சோமக்வர பிரதோஷம்
நல்ல நேரம் 12:00 Noon – 02:00 PM
நட்சத்திரம் பூரம்
திதி தேய்பிறை திரோதசி
இராகுகாலம் 07:30 AM – 09:00 AM
எமகண்டம் 10:30 AM – 12:00 Noon
குளிகை 01:30 PM – 03:00 PM
சந்திராஷ்டமம் மகரம்
மேஷம்
மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். புதிய நண்பர்களிடம் பழகும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை. தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். செல்வந்தர்களின் உதவி கிட்டும். பயணம் பலன் தரும்.
ரிஷபம்
பதவியில் இருப்பவர்கள் பக்க பலமாக இருக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம்
தட்டிப்போன விவாகப் பேச்சு தானாக வந்து சேரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும்.
கடகம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். தொலை பேசி வழித் தகவல் தொலை தூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும். உதாசீனப் படுத்தியவர்கள் கூட உங்களை நாடிவருவர்.
சிம்மம்
பணவரவு திருப்தி தரும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். இல்லம் தேடி சுபச்செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
கன்னி
விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும். நாள். விரும்பிய காரியமொன்று விரும்பியபடியே நடை பெறும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இல்லத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
துலாம்
உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள். உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும்.
விருச்சிகம்
நினைத்தது நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும்.
தனுசு
இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். உறவினர்களின் பகை மாறும். இடம், பூமியால் லாபம் ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எந்தக் காரியமும் நிறை வேற அதிகப் பிரயாசை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதுப்பிரச்சினைகள் தலை தூக்கி மனஅமைதி குறையலாம்.
கும்பம்
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். பாகப்பிரி வினைகள் சுமுகமாக முடிவடையும். வெளியூர் பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும்.
மீனம்
எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும் நாள். பழைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பதவி உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.