கட்டாரில் நேற்று நடைபெற்ற முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட, 26 பெண்களும் தோல்வியடைந்துள்ளனர்.
கட்டாரில் சூரா (Shura) எனப்படும், ஆலோசனை மன்றத்தில் உள்ள 45 இடங்களுக்கு 30 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவதற்கான தேர்தல் நேற்று இடம்பெற்றிருந்தது. ஏனைய 15 பேர், கட்டார் நாட்டின் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.
இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேருமே ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்களின் முடிவு ஏமாற்றமளிப்பதாகப் போட்டியிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்றும் எதிர்காலத்தில் கட்டார் பெண்கள் வலுவான பெண் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பெண் வேட்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.