செவ்வாய்க்கிழமை 05 ஜூலை 2021 புரட்டாதி 19 சாஸ்திரஹர மஹாலயம்
நல்ல நேரம் 08:00 AM – 09:00 AM
நட்சத்திரம் உத்திரம்
திதி தேய்பிறை சதுர்த்தசி
இராகுகாலம் 03:00 PM – 04:30 PM
எமகண்டம் 09:00 AM – 10:30 AM
குளிகை 12:00 Noon – 01:30 PM
சந்திராஷ்டமம் மகரம் காலை 8.36 வரை பிறகு கும்பம்
மேஷம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். கடைசி நேரத்தில் தேவைகள் பூர்த்தியாகும். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.
ரிஷபம்
செலவு அதிகரிக்கும் நாள். தொழிலில் மாற்றங்கள் செய்யும் எண்ணம் உருவாகும். திடீர் பயணத்தால் தித்திக்கும் செய்தி யொன்று வந்து சேரும். புது முயற்சியில் இருந்த தடை அகலும்.
மிதுனம்
தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அன்னிய தேசத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வெளி வட்டாரப் பழக்கம் விரிவடையும்.
கடகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். புதியவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
சிம்மம்
புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். நண்பர்களின் ஆதரவு உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் சந்திப்பு உண்டு.
கன்னி
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கூடும் நாள். எதிரிகள் விலகுவர். பாகப்பிரிவினைகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
துலாம்
திடீர் விரயத்தால் திணறல் ஏற்படும் நாள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். திருமணப் பேச்சுகள் திசை மாறிச் செல்லும். கருத்து வேறுபாடுகள் அகல விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
விருச்சிகம்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பொது வாழ்வில் புகழ் கூடும். நீண்டநாளையப் பிரார்த்தனை நிறைவேறும்.
தனுசு
திறமை பளிச்சிடும் நாள். நீங்கள் தேடிச்சென்று பார்க்க நினைத்த ஒருவர் உங்கள் வீடு தேடி வரலாம். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.
மகரம்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். நேற்று பாதியில் நின்ற வேலையை இன்று மீதியும் முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவி மாலை நேரத்தில் கிடைக்கும். எதிரிகள் விலகுவர். பயணம் பலன் தரும்.
கும்பம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் மனம் மாறுவர். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. பிறருக்கு பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படும்.
மீனம்
வருமானம் உயரும் நாள். கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களால் காரிய வெற்றி கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். கடிதம் கனிந்த தகவலைத் தரும். திடீர் பயணம் நன்மை தரும்.