கஹதுடுவ, ரிலாவல பகுதியில் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலைக்கு சுகாதார ஊழியர்களை அழைத்துச் சென்ற பேருந்து ஒன்றின் வயோதிப பெண் ஒருவர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
62 வயதுடைய ரிலாவல பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து அருகில் இருந்த CCTV கெமராவில் பதிவாகி இருந்தது. சம்பவம் தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது