புதன்கிழமை 06 ஜூலை 2021 புரட்டாதி 20
நல்ல நேரம் 09:00 AM – 10:00 AM
நட்சத்திரம் ஹஸ்தம்
திதி அமாவாசை
இராகுகாலம் 12:00 Noon – 01:30 PM
எமகண்டம் 07:30 AM – 09:00 AM
குளிகை 10:30 AM – 12:00 Noon
சந்திராஷ்டமம் கும்பம்
மேஷம்
அற்புதப் பலன் பெற அம்பிகையை வழிபட வேண்டிய நாள். ஆரோக்கியத் தொல்லை அகலும். அயல்நாட்டு முயற்சியில் வெற்றி கிட்டும். நண்பர்கள் கொண்டு வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும்.
ரிஷபம்
கூடுதல் நன்மை கிடைக்க குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். புகழ்மிக்கவர்களின் உதவி கிட்டும்.
மிதுனம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். அரசு வழிச் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
கடகம்
நவராத்திரி நாயகியை வழிபட்டு நன்மைகளை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.
சிம்மம்
குறைகள் அகல கோவில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். அரை குறையாக நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும்.
கன்னி
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். அருகில் உள்ளவர்களால் ஆதாயம் உண்டு. பாராட்டும், புகழும் அதிகரிக்கும். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும்.
துலாம்
முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல் ஏற்படும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
விருச்சிகம்
அதிக நன்மைகள் வந்து சேர ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். புதிய பாதை புலப் படும். புகழ் கூடும். பொருளாதார வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
தனுசு
சண்டை சச்சரவுகளைச் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
மகரம்
அம்பிகை வழிபாட்டால் இன்பங்களை வரவழைத்துக் கொள்ள வேண்ய நாள். குழப்பங்கள் அகலும். கொடுக்கல் – வாங்கல்களில் திருப்தி ஏற்படும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.
கும்பம்
பிரச்சினைகள் அதிகரிக்கும் நாள். பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசும் சூழ்நிலை உருவாகலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வரவு வருவதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் விரயம் உண்டு.
மீனம்
வருமானம் திருப்தி தரும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிட்டும்.