யாழ்.அச்சுவேலி நகரில் வாடகைக்கு தங்கியிருந்து உணவகம் ஒன்றில் பணியாற்றும் காத்தான்குடியை சேர்ந்த குடும்பஸ்த்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் (வயது- 46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் அறையிலிருந்து வெளியில் வராத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.