இலங்கை கராதே சம்மேளனத்தின் தலைவர் எச்.எம்.சிசிர குமாரவுக்கான “The Order of the Rising Sun, Gold and Silver Rays” ஆணையின் பிரகாரம் பட்டமளிக்கும் வைபவம் 2021 ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிராவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் கராதேயை ஊக்குவிப்பதில் அளப்பரிய பங்காற்றி, இரு நாடுகளுக்குமிடையேயான பரஸ்பர உறவை மேம்படுத்துவதில் சிசிர குமார பெறுமதி வாய்ந்த பங்களிப்பை ஆற்றியிருந்தார். உள்ளக மற்றும் வெளிய ஆளுமைத் திறனை கட்டியெழுப்புவதில் பங்காற்றும் ஜப்பானிய மார்ஷல் ஆர்ட்ஸ் தொடர்பில் ஆழமான ஈடுபாட்டை கொண்டுள்ள குமார, இலங்கை மக்கள் மத்தியில் கராதே தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் மற்றும் கல்லூரிகளில் நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, அதனை பயிற்றுவிப்பதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.
இவரின் அளப்பரிய பங்களிப்பினூடாக நாட்டில் அரை மில்லியனுக்கும் அதிகமான கராதே பின்பற்றுவோர் காணப்படுகின்றனர். இது இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை தொடர்ந்து அதிகளவு புகழ்பெற்று பின்தொடரப்படும் ஒரு கலைசார் விளையாட்டாக அமைந்துள்ளது. 2020 பெப்ரவரி மாதம், SLKDF மற்றும் ஜப்பானிய தூதரகம் ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்த “ஜப்பானிய தூதுவர் கராதே சம்பியன்ஷிப் 2020” போட்டியில் 3000க்கும் அதிகமான ஆர்வமிகுந்த போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
சிறந்த விறுவிறுப்பின் ஞாபகமாகவும், மனித நேயத்தின் எதிர்பார்ப்பாகவும், ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த, டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் புதிய உத்தியோகபூர்வ விளையாட்டாக கராதே உள்வாங்கப்பட்டிருந்தது. ஒரு நாள், சிசிர (“Sensei”) மாஸ்டரின் கீழ் பயிற்சி பெற்ற பல கராதே மாணவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பட்டம் பெறுவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
அண்மையில் இடம்பெற்ற கராதே சம்மேளன (SAKF) தேர்தலின் போது, 2021 – 2025 வரையான காலப்பகுதிக்கான தலைவராக குமார தெரிவு செய்யப்பட்டிருந்தார். குமார இந்தப் பதவிக்கு தெரிவானமைக்காக ஜப்பானிய தூதரகம் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது.
ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயர்ந்த கௌரவிப்பாக “The Order of the Rising Sun” அமைந்திருப்பதுடன், ஜப்பானிய கலாசாரத்தை ஏனையவர்கள் மத்தியில் ஊக்குவிக்கின்றமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகின்றது.