கேரளாவின் விழிஞ்சம் கடற்பகுதியில் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் சிக்கிய படகு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால்,சென்னையில் ஈழத்தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, வளசரவாக்கம் முரளி கிருஷ்ணா நகரில் வசித்து வந்த, சற்குணம் அல்லது சபேசன் எனப்படும் 46 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது வீட்டில், சிலவாரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், புத்தகங்கள், மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகள் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே குறித்த நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.