சமையல் எரிவாயுவின் விலை நிச்சயம் அதிகரிக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், சமையல் எரிவாயுவின் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதேவேளை, சீமெந்து, சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (07) எட்டப்படும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அமைச்சர்களுடன் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.