வியாழக்கிழமை 07 ஜூலை 2021 புரட்டாதி 21
நல்ல நேரம் 09:00 AM – 12:00 Noon
நட்சத்திரம் சித்திரை
திதி வளர்பிறை பிரதமை மாலை 3.44 மணி வரை.
இராகுகாலம் 01:30 PM – 03:00 PM
எமகண்டம் 06:00 AM – 07:30 AM
குளிகை 09:00 AM – 10:30 AM
சந்திராஷ்டமம் 12.46 மணி வரை கும்பம் பிறகு மீனம்
மேஷம்
வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். விருந்தினர்கள் வருகை உண்டு. நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர ஒற்றுமை பலப்படும். பயணம் பலன் தரும்.
ரிஷபம்
சான்றோர்களின் உதவி கிடைத்து சந்தோஷம் காணும் நாள். தனவரவு திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும்.
மிதுனம்
சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பலன் அடைவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
சிம்மம்
நினைத்தது நிறைவேறும் நாள். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு.
கன்னி
பெருமைகள் வந்து சேரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும். மக்கள் செல்வங்களின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
துலாம்
உத்தியோக முயற்சியில் பலன் கிடைக்கும் நாள். ஆபரணங்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். தாய் வழி ஆதரவு உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் ஒன்று இன்று வந்து சேரும்.
விருச்சிகம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
தனுசு
நல்ல தகவல்கள் நாடி வந்து சேரும் நாள். பிள்ளைகளால் பெருமை கூடும். கல்யாணக் கனவுகள் நனவாகலாம். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும்.
மகரம்
உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். வருமானம் போதுமானதாக இருக்கும்.
கும்பம்
காலை நேரத்தில் கவனம் அதிகம் தேவைப்படும் நாள். எதையும் நன்கு யோசித்துச் செய்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
மீனம்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் பிரச்சினைகள் கூடும். கூட்டாளிகள் உங்களை விட்டு விலகலாம். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.