வெள்ளிக்கிழமை 08 ஜூலை 2021 புரட்டாதி 22
நல்ல நேரம் 06:00 AM – 09:00 AM
நட்சத்திரம் சுவாதி
திதி வளர்பிறை த்விதியை 1.41 மணி வரை. பிறகு திரிதியை
இராகுகாலம் 10:30 AM – 12:00 Noon
எமகண்டம் 03:00 PM – 04:30 PM
குளிகை 07:30 AM – 09:00 AM
சந்திராஷ்டமம் மீனம்
மேஷம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தென்படும். சொத்துகளால் லாபம் உண்டு.
ரிஷபம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். வங்கிச் சேமிப்பு உயரும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். நட்பால் நன்மை உண்டு.
மிதுனம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். மனக்குழப்பங்கள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் கைகூடும்.
கடகம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். ஊர் மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. கையிருப்பில் சிறிது கரையலாம். அலைச்சல் அதிகரிக்கும்.
சிம்மம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வேலைப்பளு கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும்பொழுது கவனம் தேவை.
கன்னி
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் பற்றிய தகவல் உண்டு. யாரைச் சந்திக்க நினைத்தீர்களோ அவர்களே உங்களைச் சந்திக்க வருவர்.
துலாம்
வளர்ச்சி கூடும் நாள். வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த புதுமுயற்சி வெற்றி தரும். இடம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளால் வருமானம் உண்டு.
விருச்சிகம்
சாமர்த்தியமாப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். தெய்வத் திருப்பணிக்கு கொடுத்து உதவுவீர்கள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு.
தனுசு
தன்னம்பிக்கை யோடு செயல்பட்டுச் சாதனை படைக்கும் நாள். உறவினர்கள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவம் ஒன்று நடைபெறும். நண்பர்களால் விரயம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
மகரம்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் கைகூடும். ஆரோக்கியம் சீராகும். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள்.
கும்பம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். நீண்ட நாளாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மறை முகப் போட்டிகள் அகலும். தேக நலனில் கவனம் தேவை.
மீனம்
விரயங்களிலிருந்து விடுபட விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துக் கொள்வது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வரலாம்.