ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சுமார் 50 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானில் அமெரிக்க படைகள் வெளியேறியதுடன், அந்நாட்டை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அவ்வபோது, குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் குந்தூஸ் நகரில் உள்ள மசூதி ஒன்றில் வௌ்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
இந்த சம்பவத்தில் 50 பேர் பலியாகி உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை