பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் சென்னையில்நேற்று மாரடைப்பால் காலமானார். 65 வயதான, பிறைசூடன், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களையும், சுமார் ஐயாயிரம் பக்தி பாடல்களையும் எழுதி உள்ளார்.
ஆன்மிகவாதியாகவும், இலக்கியவாதியுமாக திகழ்ந்த இவர் நடிகர், வசனகர்த்தா என, சினிமா துறையில் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றி வந்தார். திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன், 1984ல் வெளிவந்த “சிறை” என்ற படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாக பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார்.
அதன் பின்னர், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, ஆதித்யன் என பல இசையமைப்பாளர்களிடம் இவர் பாடலாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.