வடமாகாணத்தில் 200ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தேர்வு செய்யப்பட்ட பாடசாலைகளை மீள திறப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சிசபை உறுப்பினர்களை வடமாகாண கல்வியமைச்சு கோரியுள்ளது.
200ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பாடசாலைகளை எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் மீள திறப்பதற்கு சகல மாகாண ஆளுநர்களும் கூட்டு தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர். இதன்படி வடக்கில் 680 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில் பாடசாலைகள் திறக்கப்பட்டதும் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக ஒத்துழைப்பு வழங்குமாறு மாகாண கல்வியமைச்சு கேட்டுள்ளது.