சீனாவில் 24 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் புகழ்பெற்ற சுவாச-நோய் நிபுணர் ஜாங் நன்ஷான் கூறுகையில், சீனாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கொரோனா தடுப்பூசிகளை பெருமளவில் தடுப்பூசி போடுவது தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதைக் காட்டுகிறது.
காய்ச்சல், மற்றும் பிற அறிகுறிகளை உள்ளடக்கிய தடுப்பூசிகளின் பின்னரான இலேசான பாதகமான எதிர்விளைவுகளின் விகிதம் ஒரு இலட்சம் பேருக்கு ஆறாக உள்ளது என்று அவர் கூறினார். கடுமையான எதிர்விளைவுகள் தொடர்பில் ஆராய்ந்தபோது அதற்கான விகிதம் ஒரு மில்லியனில் ஒன்று, என்றும் அவர் கூறினார்.
தற்போது சீனாவில் பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளான சீனா நேஷனல் பயோடெக் குழுவின் (சி.என்.பி.ஜி, சினோபார்முடன் இணைக்கப்பட்டுள்ளது) கொரோனா தடுப்பூசி மற்றும் சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய கொரோனாவாக் தடுப்பூசி ஆகியவை ஒப்பீட்டளவில் பாதுகாப்பானவை என்றும் ஜாங் கூறினார்.
சீன தடுப்பூசிகளின் செயல்திறனைப் பொறுத்தவரை, தடுப்பூசிகள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு கொரோனாவுக்கு எதிராக மக்களைப் பாதுகாக்க வல்லவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சீனாவில் தடுப்பூசி போடப்பட்ட மக்களின் முதல் தொகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவுகள் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகும் அவற்றின் அசல் மட்டங்களில் 90 சதவீதமாக இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்,’ என்று அவர் கூறினார்,
சீன தடுப்பூசிகளின் பயனுள்ள காலம் இன்னும் துல்லியமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பல்வேறு நாடுகளில் மருத்துவ பரிசோதனைகள் காட்டிய தடுப்பூசிகளின் செயல்திறன் விகிதங்களில் உள்ள வேறுபாடு அந்ததந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் மாறுபட்ட தரநிலைகளால் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் கொரோனா தடுப்பூசிகளின் முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் மருத்துவ பரிசோதனைகள் உள்நாட்டில் நடத்தப்பட்டன, அதே நேரத்தில் மூன்றாம் கட்ட சோதனைகள் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாடுகளும் வௌ;வேறு தரங்களைப் பயன்படுத்துகின்றன. சில நாடுகளில், தடுப்பூசி போடப்பட்டவர்களில் பெரும்பாலோர் மிக அதிக வெளிப்பாடு அபாயங்களைக் கொண்ட மருத்துவத் தொழிலாளர்களே உள்ளனர் என்றும் அவர் கூறினார்.