பெலாரஸ் – லித்துவேனியா எல்லையில், சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் என்று தெரியவந்துள்ளது.
கடந்த 5 ஆம் நாள் வித்துவேனியா எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில் சிறிலங்காவைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்துக்கு அருகே, கிடந்த அலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றிய பெலாரஸ் காவல்துறையினர், அவற்றைக் கொண்டு அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர், 29 வயதுடைய, றிகோவன் கிரிசாந்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என, பெலாரஸ் ஊடகவியலாளர் ஒருவர், கீச்சகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பெலாரசில் இருந்து சட்டவிரோதமாக எல்லை தாண்ட முயன்ற குடியேற்றவாசிகளை, லிதுவேனிய பாதுகாப்பு படையினர் பலமுறை தடுத்துள்ளனர். அவ்வாறு எல்லை தாண்ட முயற்சித்த குழுவில் இவர் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
குறித்த எல்லைப் பகுதியில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் உயிரிழந்த எட்டாவது நபர் இவர் என்று, பெலாரஸ் ஊடகவியலாளரான, ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.