சர்வதேச தாவரவியல் பாதுகாப்புப் பிரகடனத்தின்படி எர்வினியா பற்றீரியாவைக் கண்டறிவதற்குக் குறைந்தபட்சம் 6 நாட்களேனும் தேவைப்படும்.
இருப்பினும் 3 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரத்தில் எர்வினியா பற்றீரியா காணப்படுவதாக இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையம் அறிவித்திருக்கின்றது என்று இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி வரையறுக்கப்பட்ட விஞ்ஞானபூர்வ அடிப்படைகளை மையப்படுத்தி தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பின் பிரகாரம் சீனக்கம்பனியின் உரத்தை நிராகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கேள்விக்குரியது என்றும் அது குறித்த கம்பனிக்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரத்தில் தீங்குவிளைவிக்கக்கூடிய நுண்ணுயிரிகள் காணப்படுகின்றமை அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் சீனத்தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Clarification on the organic fertilizer to be supplied by 🇨🇳Qingdao Seawin Biotech Group to #SriLanka :
1⃣ It was selected by 🇱🇰 Ministry of Agriculture through open tender
2⃣ Its products passed organic certifications of EU ECOCERT, OMRI, REACH, & Australian Organic Input etc
1/ pic.twitter.com/WnEmRtsAmr— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) October 8, 2021