தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது சொந்த நிலத்தில் சம்பிரதாயபூர்வமாக இன்று (10/10)நெல் விதைப்பில் ஈடுபட்டார்.
கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள அவருடைய விவசாய காணியில் சம்பிரதாய பூர்வமாக பொங்கல் வைத்து மாட்டில் ஏர் பூட்டி உழுது விதைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளார்.

