13 ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ, திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாகவோ, அரசாங்கத்திடம் இந்திய வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (10/10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் பீரிஸ், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளரின் சிறிலங்கா பயணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு இதுவரை எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு நாட்டுக்கு நன்மை பயக்கும் ஒரு முடிவு எட்டப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.