உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குஷிநகர் விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறக்கும் விமானத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவே பயணம் செய்வுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 20ஆம் நாள் பௌர்ணமி தினத்தன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ள இந்த விமான நிலையத்துக்கு செல்லும், முதல் விமானத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பயணம் மேற்கொள்வார் என்று, இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.
எனினும், நாமல் ராஜபக்சவே அந்த விமானத்தில் பயணம் மேற்கொள்வார் என கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க, ஜீவன் தொண்டமான் மற்றும் பௌத்த பிக்குகளும் குறித்த விமானத்தில் குஷிநகருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட விமானத்திலேயே இவர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.