சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறைகளில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், (Shara Halton) வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர், கொழும்பில் அமைச்சர் சரத் வீரசேகரவை சந்தித்துள்ளார்.
மேலும் நாட்டின் அபிவிருத்தி விடயங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு விடயங்களுடன் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும், அதேபோல் சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்த்தில் திருத்தங்களை முன்னெடுக்கப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக காவல்துறை சடங்களில் புதிய நடைமுறை சீர்திருத்தங்களை உள்ளடக்க வேண்டும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.