திங்கட்கிழமை 11 ஜூலை 2021 புரட்டாதி 25 சஷ்டி விரதம்
நல்ல நேரம் 12:00 Noon – 02:00 PM
நட்சத்திரம் கேட்டை மாலை 5.55 வரை. பிறகு மூலம்
திதி வளர்பிறை சஷ்டி
இராகுகாலம் 07:30 AM – 09:00 AM
எமகண்டம் 10:30 AM – 12:00 Noon
குளிகை 01:30 PM – 03:00 PM
சந்திராஷ்டமம் மேஷம் மாலை 5.55 வரை பிறகு ரிஷபம்
மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைக்காட்டிலும் செலவுகூடும். பயணங்களில் தாமதம் ஏற்படலாம். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ரிஷபம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்
தைரியத்துடன் செயல்பட்டுச் சாதனை படைக்கும் நாள். குடும்பவருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள். இளைய சகோதரத்தின் வழியில் உதவிகள் கிடைக்கலாம். உடல்நிலைப் பாதிப்புகள் அகலும்.
கடகம்
வருமானம் இருமடங்காகும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் புகழ்கூடும்.
சிம்மம்
சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும் நாள். இரவு பகலாக உழைத்த உழைப்பிற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.
கன்னி
இனிய தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். எதிர்பாராத பணவரவுகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும் வாகனம் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.
துலாம்
சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் ெகாள்வீர்கள். மற்றவர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் உயரும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
விருச்சிகம்
நினைத்தது நிறைவேறும் நாள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வரலாம். நேற்றைய வரவை இன்று பொருளாக மாற்ற முன்வருவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
யோகமான நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உறவினர்கள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும்.
மகரம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கூடுதலாக உழைப்பீர்கள் திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
கும்பம்
தனவரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வியாபார விரோதம் விலகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.
மீனம்
பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். கல்யாண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.